/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணவாசி டோல்கேட்டில் வாகன சோதனை தீவிரம்
/
மணவாசி டோல்கேட்டில் வாகன சோதனை தீவிரம்
ADDED : மார் 18, 2024 03:00 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மணவாசி டோல்கேட் செயல்படுகிறது.
இந்த டோல்கேட் வழியாக தினமும் கார், பஸ் மற்றும் இதர வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில், 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு உரிய ஆவணம் இல்லை என்றால், பணம் பறிமுதல் செய்யப்படும். இதையொட்டி, நேற்று காலை லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் போலீசார், மணவாசி டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களில் சோதனை தீவிரமாக நடந்தது. திருச்சியில் இருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்தும் வாகனங்களும் சோதனை செய்யப்பட்டது.

