/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும்

ADDED : மே 30, 2024 01:11 AM
கரூர், கரூர்--கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும்.
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் வீடு, அலுவலகங்கள் போன்ற கட்டுமான பணிகள் நடந்து
வருகிறது.
இப்பணிகளுக்காக செங்கல், இரும்பு, ஜல்லி கற்கள் போன்றவை வேன், லாரிகளில் ஏற்றப்பட்டு மாநகர பகுதிகளின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
பெரும்பாலான வாகனங்கள், தார்ப்பாய் கொண்டு மூடி செல்லாமல் திறந்த நிலையில் செல்கிறது. இதுபோன்ற வாகனங்களில் இருந்து, காற்றின் காரணமாக துாசிகள் பறந்து, பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து
வருகிறது.
இதன் காரணமாக அவ்வப்போது சிறு விபத்துக்களும் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.