/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விதிமீறி செல்லும் வாகனங்கள்; சாலையில் விபத்து அதிகரிப்பு
/
விதிமீறி செல்லும் வாகனங்கள்; சாலையில் விபத்து அதிகரிப்பு
விதிமீறி செல்லும் வாகனங்கள்; சாலையில் விபத்து அதிகரிப்பு
விதிமீறி செல்லும் வாகனங்கள்; சாலையில் விபத்து அதிகரிப்பு
ADDED : டிச 09, 2024 07:03 AM
கரூர்: கரூர், ரத்தினம் சாலை பகுதியில், மூன்று சாலைகள் பிரிகின்றன. இந்த சாலையில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். காலை, மாலை நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.
ரத்தினம் சாலையில் இருந்து வெங்கமேடு மேம்பாலத்தில் ஏறி, இறங்கும் வாகனங்கள், மற்ற இரண்டு சாலைகளில் வாகனங்களுடன் மோதிக்கொள்கின்றன. போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் மினி பஸ்கள் நின்று, பயணிகளை ஏற்றி செல்கின்றன. அப்போது, பயணிகள் சாலையை கடக்கும் போது, மேம்பாலத்திலிருந்து வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் சம்பவங்கள், அன்றாட நிகழ்வாகி வருகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.