/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ஒருவழி பாதையில் செல்லும் வாகனங்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
/
கரூரில் ஒருவழி பாதையில் செல்லும் வாகனங்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
கரூரில் ஒருவழி பாதையில் செல்லும் வாகனங்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
கரூரில் ஒருவழி பாதையில் செல்லும் வாகனங்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : மே 10, 2025 01:02 AM
கரூர், கரூர் நகரில் ஒருவழி பாதை சாலையில், போக்குவரத்து போலீசார், கண்டு கொள்ளாததால், அதிகளவில் வாகனங்கள் சென்றபடி உள்ளது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
கரூர் மனோகரா கார்னரில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வழியாக, வெங்கமேட்டுக்கு செல்லும் தின்னப்பா கார்னர் சாலை, இரண்டாக பிரிக்கப்பட்டு ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், வெங்கமேடு, ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மனோகரா கார்னர் பகுதிக்கு செல்ல, இடதுபுற சாலையில் செல்லாமல், ஒரு வழி பாதையான வலதுபுற சாலையில், வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
ஆனால், ஒரு வழி பாதையில் வாகனங்கள் செல்வதை, தின்னப்பா கார்னர் பகுதியில் பணியில் உள்ள, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது இல்லை.
இதனால், மனோகரா கார்னரில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக, தின்னப்பா கார்னருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும் அந்த சாலையில், இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், கார் உள்ளிட்ட வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில், பல மணி நேரம் நிறுத்தப்படுகிறது.
எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில், தின்னப்பா கார்னர் பகுதியில், பணியில் உள்ள போக்குவரத்து போலீசார், ஒருவழி பாதையில் செல்லும், வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.