ADDED : செப் 28, 2026 06:41 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர்,
தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், 12ம் நுாற்றாண்டை
சேர்ந்தது மட்டுமின்றி, குடைவரை கோவிலாகும். இக்கோவிலில்,
ஆண்டுதோறும் புரட்டாசி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். கடந்த, 12ல்
புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து,
நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து
வருகிறது. மேலும், கடந்த, 21ல், திருக்கல்யாண உற்சவம், 24ல்
தேரோட்டம் நடந்தது. இதன்படி, நேற்று வெள்ளி கருட வாகனத்தில்
வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை
தரிசனம் செய்தனர். அக்., 4ல் முத்து பல்லக்கு, 5ல் ஆளும் பல்லக்கு, 6ல்
வண்ண பூக்களால் வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
