ADDED : ஜூலை 06, 2025 01:11 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் புங்கம்பாடி மேற்கு கல்லு மேட்டுப்பட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா, விவசாய அடையாள எண் பதிவு செய்வது குறித்து விளக்கினார். வேளாண்மை அலுவலர் கவுதமி, தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, அடுத்த தவணை பி.எம். கிஷான் தொகை பெற இயலாது என்பதையும், மானியத்தில் வழங்கப்படும் சொட்டு நீர் பாசன கருவிகள் வேளாண் உபகரணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
க.பரமத்தி, வேட்டையார்பாளையத்தை சேர்ந்த இயற்கை விவசாயி மனோகர், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும் மீன் அமில கரைசல், பஞ்சகாவியா கரைசல், இஞ்சி பூண்டு கரைசல் எவ்வாறு தயாரித்தல் மற்றும் தயாரித்த பொருட்களை எப்போது பயன்படுத்துவது என்பது குறித்து பேசினார்.மேலும் விவசாயிகளுக்கு மண்புழு உர சாகுபடி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.