/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
/
அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
ADDED : ஏப் 20, 2024 08:10 AM
குளித்தலை: விஸ்வநாதபுரத்தில், அடிப்படை வசதிகள் செய்து தராததால், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
பெரம்பலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., விஸ்வநாதபுரம் சுப்பன் களத்தில், 50 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு தெருவிளக்கு, கழிப்பிட வசதி, தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, கிராம மக்கள் டவுன் பஞ்., நிர்வாகம், ஆர்.டி.ஓ., தாசில்தார், கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.
சுப்பன் களம் கிராமத்திற்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததை கண்டித்து இப்பகுதி மக்கள், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக, ஒரு மாதத்துக்கு முன்பு டிஜிட்டல் பேனர் வைத்தனர். தொடர்ந்து கருப்பு கொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதை அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வந்தனர். மேலும் அவர்கள் கருணை கொலை செய்யுங்கள் என, டிஜிட்டல் பேனர் வைத்தனர்.
மத்திய, மாநில அரசு சுப்பன் களம் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால், நேற்று நடந்த லோக்சா தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர்.