தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : மே 30, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஊத்தாம்பட்டி கிராமத்தில் விநாயகர், மாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என ஊர் மக்கள், விழா கமிட்டியினர் முடிவெடுத்து பணிகளில் ஈடுபட்டனர்.

தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த, 27ல் குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜை, கும்ப ஸ்தாபனம்,பூர்ணாஹூதி நடத்தினர்.

நேற்று காலை 2ம் கால யாகவேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனிதநீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி, கும்பாபி ேஷகம் செய்தனர். தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும், விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us