/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விஸ்வ ஹிந்து பரிசத் செயற்குழு கூட்டம்
/
விஸ்வ ஹிந்து பரிசத் செயற்குழு கூட்டம்
ADDED : மார் 24, 2025 06:50 AM
கரூர்: விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் (தென் தமிழகம்) மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில், தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், கட்டண உயர்வை கண்டிப்பது; கோவில்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தவறிய, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது; சென்னையில் ஹஜ் பயணிகளுக்கு, 65 கோடி ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில், தங்கும் இல்லம் கட்டுவதை கண்டிப்பது; தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை போதை கலாசாரத்தில் இருந்து மீட்க, விழிப்புணர்வு இயக்கம் நடத்துவது; தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பசுமாடுகள் கடத்துவதை தடுக்க வேண்டும்; ஹிந்து இயக்கங்கள் நடத்தும் சட்டரீதியான போராட்டங்களுக்கு தடை விதிக்கும், தமிழக காவல் துறையை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அகில இந்திய இணை செயலாளர் வெங்கடேஷ், மாநில செயலாளர் லட்சுமி நாராயணன், திருப்பூர் கோட்ட செயலாளர் விஜய், கரூர் மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் கொங்குவேல், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஓம்சக்தி சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.