/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கை
/
வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கை
வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கை
வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூலை 02, 2025 02:02 AM
கரூர்,வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, உறுப்பினர் சேர்க்கை யில் ஈடுபட உள்ளோம் என, கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் பேசினார்.
பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை, தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுகிறோம். அதில் அறிவியல், பண்பாடு, மொழி என எல்லாவற்றிலும் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை தராமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதுமட்டுமின்றி கரூர் மாவட்டத்தில், 3,000 கோடி ரூபாய் நலத்திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, கரூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டம் நாளை (இன்று) மாலை, 6:00 மணியளவில் நடக்கிறது. நாளை (3ம் தேதி) முதல், நான்கு சட்டசபை தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 40 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையில் நிர்வாகிகள்
ஈடுபடுவர். இவ்வாறு கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகர செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி செயலாளர் ராஜா, ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.