/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒரு முறை பா.ஜ.,விற்கு ஓட்டு போடுங்கள் கரூர் வேட்பாளர் செந்தில்நாதன் பிரசாரம்
/
ஒரு முறை பா.ஜ.,விற்கு ஓட்டு போடுங்கள் கரூர் வேட்பாளர் செந்தில்நாதன் பிரசாரம்
ஒரு முறை பா.ஜ.,விற்கு ஓட்டு போடுங்கள் கரூர் வேட்பாளர் செந்தில்நாதன் பிரசாரம்
ஒரு முறை பா.ஜ.,விற்கு ஓட்டு போடுங்கள் கரூர் வேட்பாளர் செந்தில்நாதன் பிரசாரம்
ADDED : ஏப் 04, 2024 04:44 AM
கரூர்: ''கரூர் லோக்சபா தொகுதியில் ஒரு முறை, பா.ஜ.,விற்கு ஓட்டு போடுங்கள்,'' என, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் பேசினார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி, பெருமாள்பட்டி, பொன் நகர், ராயனுார், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர் உள்ளிட்ட பகுதிகளில், பா.ஜ., வேட்பாளரும், அக்கட்சியின் மாவட்ட தலைவருமான செந்தில்நாதன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு திரண்டு இருந்த பெண்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது, செந்தில்நாதன் பேசியதாவது: காங்கிரஸ், தி.மு.க., சேர்ந்து தான் கட்சத்தீவை தாரை வார்த்தது. தற்போது, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கட்சத்தீவு குறித்த உண்மையை வெளியிட்டவுடன் பொய் பேசி வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக கரூர் லோக்சபா தொகுதியில், ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத எம்.பி.,ஜோதிமணி தேவையா?. ஒரு சாமானியனாக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கிறேன், எத்தனை காலம்தான்
தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்?.
இரண்டு ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், கல்வியை கொடுக்க சொன்னால் கஞ்சாவை கொடுக்கிறீர்கள். 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்கின்றனர். இந்த தேர்தல் பிரதமர் யார் என்று தேர்வு செய்வதற்காக நடக்கிறது. எதிர்க்கட்சிகளில் யார் பிரதமர் என்று தெரியவில்லை. மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்க, பா.ஜ.,க்கு ஓட்டு போட வேண்டும். தமிழகத்தில் ஒரு முறை, பா.ஜ.,க்கு ஓட்டளித்தால், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

