சுற்று··ச்சூழல் பாதுகாப்பைவலியுறுத்தி 'வாக்கத்தான்'
சுற்று··ச்சூழல் பாதுகாப்பைவலியுறுத்தி 'வாக்கத்தான்'
ADDED : மே 28, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
கரூர்:புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில், சுற்றுச்சுழல் பாதுகாப்பை வலியுறுத்தி, நீண்ட துார நடைபயணம் (வாக்கத்தான்) நிகழ்ச்சி நடந்தது.
முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) ராஜலிங்கம் தொடங்கி வைத்தார். தற்போது, உலக அளவில் நிலவி வரும் எரிசக்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, எரிசக்தி சேமிப்பு என்ற தலைப்பில் நீர், மின்சாரம், பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்றவற்றின் பயன்பாட்டை குறைக்கவும், சரியாக பயன்படுத்துவற்காகவும் விழிப்புணர்வு நடந்தது.
கந்தம்பாளையம் முதல் டி.என்.பி.எல்., விளையாட்டு மைதானம் வரை, நீண்ட தூர நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், 650 பேர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
