தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாக்காளர் சிறப்பு முகாம்: பார்வையாளர் ஆய்வு

வாக்காளர் சிறப்பு முகாம்: பார்வையாளர் ஆய்வு

வாக்காளர் சிறப்பு முகாம்: பார்வையாளர் ஆய்வு


ADDED : ஜன 05, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே, ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளியில், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. சிறப்பு வரைவு வாக்-காளர் பட்டியல் பார்வையாளர் கோவிந்தராவ், கலெக்டர் தங்கவேல் ஆகியோர் ஆய்வு மேற்-கொண்டனர்.

தொடர்ந்து, கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள, 4 தொகுதிகளில், 8,18,672 வாக்காளர்கள் உள்ளனர். பொதுமக்கள் பார்வைக்-காக அனைத்து பஞ்., நகராட்சி, மாநகராட்சி, வட்-டார வளர்ச்சி அலுவலகங்கள், தாலுகா அலுவல-கங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்-பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்கா-ளர்கள் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், நீக்கம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனு அளிக்க, ஜன., 18 வரை அவகாசம் உள்ளது. இதற்கு, படிவம்-6ஐ பூர்த்தி செய்து உறுதிமொழி படிவத்-துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பெயர் சேர்க்க ஆட்சேபனை தெரிவிக்க படிவம்-7, முகவரி மாற்றம் பதிவு செய்ய படிவம்-8ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். வாக்காளர்கள் www.elections.tn.gov.in என்ற இணை-யதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், கரூர் தாசில்-தார்கள் மோகன்ராஜ், சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us