/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி,தோல்வியை கள் நிர்ணயம் செய்யும்
/
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி,தோல்வியை கள் நிர்ணயம் செய்யும்
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி,தோல்வியை கள் நிர்ணயம் செய்யும்
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி,தோல்வியை கள் நிர்ணயம் செய்யும்
ADDED : ஏப் 23, 2025 02:04 AM
கரூர்,:''தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில் கள் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தியாக இருக்கும்,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
கரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்கினால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு ஏற்படும். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., - த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் கள் மீதான தடையை நீக்குவோம் என அறிவித்தால், முதல்வர் ஆக வாய்ப்பு உண்டு. கள் மீதான தடையை நீக்க குரல் கொடுக்க, தமிழகத்தில் உள்ள பல கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் கள் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தி படைத்ததாக இருக்கும்.
சட்டசபை தேர்தல் நேரத்தில், கள் இயக்கம் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிப்போம். தமிழக அரசு பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு இலவசங்கள் தேவையில்லை. சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினால் போதும். தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்க கோரி, பல லட்சம் தபால் அட்டைகளை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்புகிறோம். கரூரில் விரைவில் கள் விடுதலை கருத்தரங்கம் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாலு, தமிழ் தேசிய கொற்றம் தலைவர் பாண்டியன், கொங்கு இளைஞர் பேரவை கார்வேந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, கள் மீதான தடையை நீக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாய சங்க பிரதிநிதிகள், தபால்
அட்டைகளை அனுப்பினர்.