தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு 'சீல்'

குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு 'சீல்'

குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு 'சீல்'


ADDED : ஏப் 25, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு தொகுதிகளில் ஓட்டுகள் பதிவான இயந்திரங்கள், தளவாப்பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், தனித்தனி அறைகளில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) குளித்தலை ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன. அதில், நேற்று முன்தினம் நடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டுகள் பதிவான, இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையத்தில் உள்ள, ஓட்டு எண்ணும் மையமான குமாரசாமி பொறியியல் கல்லுாரிக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.

பிறகு, நான்கு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுகள் பதிவான இயந்திரங்கள், தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில், சீல் வைக்கப்பட்டது. பிறகு, 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் கரூர் மாவட்ட போலீசார் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட அறைகளை, கரூர் கலெக்டர் ரவிக்குமார், எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள்

பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us