தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் 'சீல்' வைப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் 'சீல்' வைப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் 'சீல்' வைப்பு


ADDED : மார் 25, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை, கிருஷ்ண

ராயபுரம் சட்டசபை

தொகுதியின் ஓட்டுச்சாவடி இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீல் வைத்து, 'சிசிடிவி' கேமரா முலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குளித்தலை சட்டசபை தொகுதியில், 286 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பழுது ஏற்பட்டால் சரி செய்வதற்கு கூடுதலாக வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை 4:00 மணியளவில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.

பின்னர், குளித்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் சுவாதி ஸ்ரீ தலைமையில், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களான அ.தி.மு.க., மணிகண்டன், பா.ஜ., ராஜவேல், தி.மு.க., வக்கீல் வீரமலை, நாம் தமிழர் கட்சி அந்தோணிசாமி மற்றும் பலர் முன்னிலையில் ஓட்டுப்

பதிவு இயந்திரங்கள் இறக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைத்து அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இதேபோல், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சக்தி

வேல் தலைமையில், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் இறக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அறைகளின் முன்புறம், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us