/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி ஆற்றுப்பகுதியில் எச்சரிக்கை போர்டு: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
காவிரி ஆற்றுப்பகுதியில் எச்சரிக்கை போர்டு: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காவிரி ஆற்றுப்பகுதியில் எச்சரிக்கை போர்டு: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காவிரி ஆற்றுப்பகுதியில் எச்சரிக்கை போர்டு: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 05, 2025 02:12 AM
கரூர்: காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில், எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன், 12ல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், பல மாதங்களுக்கு பிறகு, காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் வாய்ப்புள்ளது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில், காவிரி ஆறு ஓடும் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, புகழூர் தாலுகா பகுதிகளில் பொதுமக்கள் நாள்தோறும் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் செல்வர்.குறிப்பாக, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான தளவாப்பா-ளையம், நெரூர், வாங்கல், திருமாக்கூடலுார், கட்டளை, மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்-ளிட்ட முக்கிய இடங்களில் பொது மக்கள், காவிரி ஆற்றில் குளித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் பல இடங்-களில், 10 அடிக்கும் ஆழமாக குழிகள் உள்ளன. தற்போது, குடிநீ-ருக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள, 1,000 கன அடி தண்ணீர் ஆற்றில் செல்வதால் குழிகள் மறைந்துள்-ளது.
அதில், விபரம் தெரியாமல் பொது மக்கள் இறங்கி குளிக்கும் போது, புதை மணலில் சிக்கி உயிரிழக்க வாய்ப்புள்ளது.
மணல் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்த தகவல், நீர்வளத்துறை, வருவாய் மற்றும் உள்ளூர் போலீசாருக்கு நன்கு தெரியும்.
அந்த இடங்களை உடனடியாக கண்டறிந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காவிரி ஆற்று பகுதி-களில் எச்சரிக்கை போர்டுகளை வைக்க வேண்டியது அவசியம்.