/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 13, 2024 06:48 AM
குளித்தலை: கூட்டு குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகி செல்கிறது.
குளித்தலை அடுத்த, மருதுார் காவிரி ஆற்றில் இருந்து, சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு, முன்னோட்டமாக தண்ணீர் சரி பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணிக்கம்பட்டி தோகைமலை நெடுஞ்சாலையில் கூடலுார் பஞ்., பேரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்., அலுவலகம் அருகில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த, 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வீணாகி நெடுஞ்சாலையில் செல்கிறது. மேலும், குளம்போல் தேங்கி நிற்கிறது.
இந்த சாலையில் அரசு பஸ், கார் மற்றும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகிறது. தண்ணீர் வீணாகி செல்வதுடன், மக்களுக்கும் தொற்று நோய் பரவ காரணமாக இருந்து வருகிறது. மேலும், தேங்கி நிற்கும் குடிநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. குடிநீர் குழாயை சரி செய்து தேங்கிய தண்ணீரை வெளியேற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.