/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் அருகே கும்பகுழி கால்வாயில் ஆகாயத்தாமரையால் நீரோட்டம் பாதிப்பு
/
மாயனுார் அருகே கும்பகுழி கால்வாயில் ஆகாயத்தாமரையால் நீரோட்டம் பாதிப்பு
மாயனுார் அருகே கும்பகுழி கால்வாயில் ஆகாயத்தாமரையால் நீரோட்டம் பாதிப்பு
மாயனுார் அருகே கும்பகுழி கால்வாயில் ஆகாயத்தாமரையால் நீரோட்டம் பாதிப்பு
ADDED : ஜூலை 05, 2025 02:00 AM
கரூர் மாயனுார் அருகே, கும்பகுழியில் வடிகால் கால்வாயில் ஆகாயத்தாமரை படர்ந்து இருப்பதால், நீரோட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாயனுார் காவிரியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதில், 1.04 டி.எம்.சி., தண்ணீர் தேக்கமுடியும். இதன்மூலம், 10 கி.மீ., துாரம் காவிரி தண்ணீர் தேங்கி நிற்கிறது. தடுப்பணையின் மேற்பகுதியில் உள்ள, கட்டளை படுகை அணையில் இருந்து பிரிந்து செல்லும் தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுகட்டளை மேட்டுவாய்க்கால் ஆகிய நான்கு பாசன வாய்க்கால்கள் நேரடி பாசனம் தருவதோடு, கிணற்று பாசன மூலம் பயன்பெறுகிறது.
இதேபோல், அமராவதி பாசன வாய்க்கால் வீரராக்கியம், மணவாசி வழியாக, கும்பகுழியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. மாயனுார் தடுப்பணையில், 1.04 டி.எம்.சி., தண்ணீர் தேக்கினால், அமராவதி பாசன வாய்க்காலில் வரும் தண்ணீர் தேங்கி, அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. பருவமழை காலங்களில், 400 ஏக்கர் முதல், 500 ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. தண்ணீர் வெளியேறும் வகையில், வடிகால் வசதி செய்ய அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நபார்டு திட்டத்தில், 9 கோடி ரூபாய் செலவில், கும்பகுழியில் இருந்து மாயனுார் தடுப்பணை கீழ்புறம் வரை, வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் கால்வாயில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. இதனால்,
நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. தண்ணீர் செல்ல வழியில்லாமல் வயல்களில் தேங்க வாய்ப்பு உள்ளது. பருவ மழை தொடங்கும் முன் வடிகால் கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, துார் வார நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.