ADDED : செப் 19, 2026 05:12 AM
கரூர்:மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 11 ஆயிரத்து, 22 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 11 ஆயிரத்து, 790 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 10 ஆயிரத்து, 289 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,230 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 0.16 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: (மி.மீ.,) குளித்தலை, 6, தோகைமலை, 10.20, கிருஷ்ணராயபுரம், 11.50, மாயனுார் மற்றும் பஞ்சப்பட்டியில் தலா, 15, பாலவிடுதி, 12, மயிலம்பட்டி, 1 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 5.89 மி.மீ., மழை பதிவானது.
