ADDED : அக் 03, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 10
ஆயிரத்து, 881 கன அடி தண்ணீர் வந்தது.
நேற்று காலை, 6:00 மணி
நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 13 ஆயிரத்து, 553 கன அடியாக
அதிகரித்தது. அதில் டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக
காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 673 கன அடி தண்ணீரும், நான்கு பாசன
வாய்க்காலில், 1,155 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* கரூர்
மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில்
பஞ்சப்பட்டியில், 4.60 மி.மீ., கடவூர், 2.50 மி.மீ., பாலவிடுதி, 4
மி.மீ., மயிலம்பட்டி, 3 மி.மீ., மழை பெய்தது.
