/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரியில் ஓட காத்திருக்கும் மூன்று அணைகளின் தண்ணீர்: மகிழ்ச்சியுடன் விவசாய பணிகள் துவக்கம்
/
காவிரியில் ஓட காத்திருக்கும் மூன்று அணைகளின் தண்ணீர்: மகிழ்ச்சியுடன் விவசாய பணிகள் துவக்கம்
காவிரியில் ஓட காத்திருக்கும் மூன்று அணைகளின் தண்ணீர்: மகிழ்ச்சியுடன் விவசாய பணிகள் துவக்கம்
காவிரியில் ஓட காத்திருக்கும் மூன்று அணைகளின் தண்ணீர்: மகிழ்ச்சியுடன் விவசாய பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 27, 2024 12:55 AM
கரூர்: காவிரியாற்றில், மூன்று அணைகளின் தண்ணீர் கரைபுரண்டு ஓட காத்திருக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணிகளை துவக்கியுள்ளனர்.கரூர் மாவட்டத்தில், கடந்தாண்டு வட கிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்தது.
வழக்கமாக, மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் தொடக்-கத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும். நடப்பாண்டு, இம்மாதம் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. நடப்பாண்டு கடந்த ஜூன், 12ல் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது வினாடிக்கு, குடிநீருக்காக மட்டும், 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு, தென்மேற்கு பருவ மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்-துள்ளது. தற்போது வினாடிக்கு, 2,483 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்-ளது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், கட்டளை மற்றும் மண-வாசி பகுதிகளில் காவிரியாற்றில் கலக்கும். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.தற்போது வினாடிக்கு, 1,235 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்-ளது. இந்த தண்ணீர், பவானி கூடுதுறை என்ற இடத்தில் காவிரி-யாற்றில் கலக்கும்.இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்-காக, தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், அமராவதி அணை மற்றும் பவானிசாகர் அணைகளின் தண்ணீர் இன்னும், ஒரு சில நாட்களில், காவிரியாற்றில் கரை புரண்டு ஓட போகிறது.இதனால் கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் விவசாயிகள், சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். குறிப்பாக புகளூரில் வெற்றிலை, நெரூரில் கோரைப்புல், நெல், கரும்பு, லாலாப்பேட்டை, குளித்தலையில் வாழை, வெற்றிலை, ஆண்டாங்கோவில் பகுதியில் மஞ்சள் சாகுபடி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதை தவிர, எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.