/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் நீர் வரத்து
/
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் நீர் வரத்து
ADDED : மே 24, 2024 06:49 AM
கரூர் : பரவலாக பெய்த மழையால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,172 கன அடி தண்ணீர் வந்தது.
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. பல்வேறு பகுதியில் மழை காரணமாக, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர் மட்டம், 37.37 அடியாக இருந்தது.மழை நிலவரம் (மி.மீ.,)கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர், 3.2 மி.மீ., அரவக்குறிச்சி, 2,6, அணைப்பாளையம், 1.2, குளித்தலை, 11.6, தோகைமலை, 2.2, கிருஷ்ணராயபுரம், 3.4, மாயனுார், 2.4, பஞ்சப்பட்டி, 1.4, கடவூர், 12 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.33 மி.மீ., மழை பதிவானது.