/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து; அதிகரிப்பு: அமராவதிக்கு குறைந்தது
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து; அதிகரிப்பு: அமராவதிக்கு குறைந்தது
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து; அதிகரிப்பு: அமராவதிக்கு குறைந்தது
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து; அதிகரிப்பு: அமராவதிக்கு குறைந்தது
ADDED : டிச 23, 2024 10:00 AM
கரூர்: மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது. அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து, படிப்படியாக குறைந்து வருகிறது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 2,452 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 3,684 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதில், 2,884 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மூன்று பாசன கிளை வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அமராவதி அணை
கேரளா மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அமராவதி அணைக்கு வினாடிக்கு, 710 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 689 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 89.01 அடியாக இருந்தது. அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 500 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 250 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, 959 கன அடி தண்ணீர் வந்தது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.76 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பொன்னனியாறு அணை
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 39.06 அடியாக இருந்தது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) குளித்தலை, 47.50, தோகைமலை, 11, கிருஷ்ணராயபுரம், 24, மாயனுார், 27, பஞ்சப்பட்டி, 25.40, மயிலம்பட்டி, 3 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 11.83 மி.மீ., மழை பதிவானது.

