ADDED : ஜன 25, 2026 07:59 AM

கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.மேட்டூர் அணை நீர்மட்டம், 94.66 அடியாக உள்ள நிலையில், காவிரியாற்றில் வினாடிக்கு, 7,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர், அமராவதி அணைகள் மற்றும் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீரும், காவிரி-யாற்றில் கலக்கிறது.
இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு கடந்த சில நாட்களாக, தண்ணீர் வரத்து அதிகரித்-தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6,112 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக வினா-டிக்கு, 6,418 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.07 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், 88 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
