/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
/
மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 11, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், மாயனுார் கதவணைக்கு நீர் அதிகரித்து வருவதால், ஷட்டர் வழியாக திறந்து விடப்படுகிறது.
மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர், டெல்டா பாசனத்திற்கு செல்கிறது.
தற்போது மாயனுார் கதவணைக்கு, 45 ஆயிரம் கன அடி நீர் வரத்தானது. வரும் தண்ணீரை டெல்டா பாசனத்திற்கு, 50 ஷட்டர்கள் வழியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தண்ணீர் தொடர்ந்து செல்வதால், கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மக்களுக்கு காவிரி நீர் கிடைக்கும் வகையில் வினியோகம் செய்யும பணி சீராக நடந்து வருகிறது.