/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 24, 2025 09:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 13,989 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 14,664 கன அடியாக அதிகரித்தது.
அதில், சம்பா சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 14,144 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.71 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

