/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது
/
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது
ADDED : அக் 25, 2025 01:29 AM
கரூர் :கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,218 கன அடி தண்ணீர் வந்தது. மழை காரணமாக அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 522 கன அடி தண்ணீர் வந்தது. மழை காரணமாக நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 686 கன அடியாக அதிகரித்தது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 54 ஆயிரத்து, 586 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 45 ஆயிரத்து, 565 கன அடியாக, தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 44 ஆயிரத்து, 765 கன அடி தண்ணீரும், மூன்று பாசன வாய்க்காலில், 1,000 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

