/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழை இல்லாததால் பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
/
மழை இல்லாததால் பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
மழை இல்லாததால் பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
மழை இல்லாததால் பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
ADDED : டிச 19, 2024 01:11 AM
கரூர், டிச. 19-
மழை இல்லாததால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,785 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தண்ணீர் வரத்து, 1,079 கன அடியாக குறைந்தது.
90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர் மட்டம், 87.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 544 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 150 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
மேலும், மழை இல்லாததால் கரூர் அருகே உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,151 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 4,021 கன அடியாக குறைந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 10 ஆயிரத்து, 610 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6,148 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், 5,348 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் சம்பா சாகுபடி பாசனத்துக்காக திறக்கப்பட் டது. மூன்று பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்
பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 44 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.56 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்
பட்டுள்ளது.

