ADDED : ஏப் 28, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:வல்லம் கடைவீதியில், குடிநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து வல்லம் கடைவீதி பகுதியில் உள்ள மக்களுக்கு, பஞ்சாயத்து சார்பில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில் வல்லம் கடைவீதி அருகில் உள்ள குழாயில் விரிசல் ஏற்பட்டு, தினமும் குடிநீர் வீணாகி சாக்கடை கால்வாயில் செல்கிறது. இதனால் மற்ற பகுதிகளுக்கு, குடிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விரிசல் அடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
