/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக செல்லும் தண்ணீர்
/
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக செல்லும் தண்ணீர்
ADDED : செப் 22, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் அருகே, நெரூர் செல்லும் வழியில், கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து நாள்தோறும் தண்ணீர் வெளியேறி வருவதால், சாலையோரம் சாக்கடை போல் தண்ணீர் வீணாக ஓடுகிறது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால், குடிநீர் வீணாகி வருகிறது. இங்கு, அருகில் குடியிருப்பவர்கள் துர்நாற்றத்திலும், கொசு தொல்லையாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய, உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.