/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புலியூரில் குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் தண்ணீர்
/
புலியூரில் குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் தண்ணீர்
புலியூரில் குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் தண்ணீர்
புலியூரில் குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் தண்ணீர்
ADDED : மே 06, 2025 02:08 AM
கரூர்:
புலியூரில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
புலியூர் டவுன் பஞ்சாயத்தில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கட்டளை காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய்கள் மூலம் புலியூர் சுற்றியுள்ள பல்வேறு ஊர்க-ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில், புலியூர் அருகில் உள்ள பி.வெள்ளாளப்பட்டியில், குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் சரி செய்யவில்லை. மேலும், 4, 14 வார்டுகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து புகார் அளித்தும், டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுபோல், வீணாக தண்ணீர் செல்வதால் அழுத்தம் குறைந்து மேடான பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகி-றது. சாலையில் தேங்கும் நீர், மீண்டும் குழாய் வழியாக உள்ளே செல்-கிறது. இதனால், குடிநீர் மாசடைந்து, பொதுமக்களுக்கு மலே-ரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்-ளது. எனவே, சுகாதாரமான குடிநீர் கிடைக்க உறுதி செய்யும் வகையில், உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.