/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு கரூரில் தடுப்பணை நிரம்பி வெளியேற்றம்
/
அமராவதி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு கரூரில் தடுப்பணை நிரம்பி வெளியேற்றம்
அமராவதி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு கரூரில் தடுப்பணை நிரம்பி வெளியேற்றம்
அமராவதி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு கரூரில் தடுப்பணை நிரம்பி வெளியேற்றம்
ADDED : ஜூலை 28, 2025 08:00 AM
கரூர்: அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரிக்கப்பட்டதால், கரூர் அருகே தடுப்பணை நிரம்பியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அம-ராவதி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 3,341 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினா-டிக்கு, 6,277 கன அடியாக அதிகரித்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 3,154 கன அடியில் இருந்து, 6,975 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு தண்ணீர் வரத்து, 2,713 கன அடியாக இருந்தது. இதனால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நேற்று நிரம்பியது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 87.44 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 17,029 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நில-வரப்படி தண்ணீர் வரத்து, 27,107 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு, 25,636 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், தென்கரை வாய்க்காலில், 650 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்-பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்-மட்டம், 19.52 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், 106 கன அடி தண்ணீர் திறக்கப்பட்-டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணை முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் வினா-டிக்கு, 75,000 கன அடி முதல், ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு, செல்லுமாறு அறிவுறுத்தப்பட்-டுள்ளது.