/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் இணைப்பு; வி.சி.க.,வினர் கலெக்டரிடம் மனு
/
குடிநீர் இணைப்பு; வி.சி.க.,வினர் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 11, 2025 06:59 AM
கரூர்: பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என, வி.சி.க., ஒன்றிய செயலாளர் வன்னியரசு தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்தில், 12, 14 வது வார்டுகளில் உள்ள பூவம்பாடி, லட்சுமணப்பட்டி ஆகிய மயானத்தில் பாதை மற்றும் கொட்டகைகளை அமைத்து தர வேண்டும். எம்.புதுப்பட்டியில் பகுதியில் மழை காலத்தில் வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. மழைநீர் வடிகால வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இங்குள்ள, அனைத்து வீடுகளுக்கு அம்ரித் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இரவு நேரங்களில் கனிம வள கொள்ளை நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.