ADDED : செப் 04, 2026 06:20 AM

குளித்தலை:குழாயில் பழுது ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி செல்கிறது.
கடவூர்
ஊராட்சி ஒன்றிய கிராமங்களுக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம்
மூலம், பாதுகாக்கப்பட்டதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல்
தரகம்பட்டி அருகே, கீழப்பகுதி ஊராட்சி கிராமங்களுக்கு, மின்
மோட்டார் வாயிலாக குடியிருப்புகளுக்கு, காவிரி குடிநீர் வினியோகம்
செய்யப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு
குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் பாளையம்- -
தோகைமலை மெயின் ரோட்டில் உள்ள மைலம்பட்டியில் இருந்து,
சிந்தமாணிபட்டி பகுதிக்கு செல்லும் குழாய், மின்வாரிய அலுவலகம்
எதிரே உடைப்பு ஏற்பட்டு சேதமாகி உள்ளது. கடந்த ஒரு வாரமாக குழாயில்
இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது. இந்த தண்ணீர் வடிகால் வழியாக
ஆற்றுவாரியில் செல்கிறது. இதனால் கடைநிலை
குடியிருப்புகளுக்கும், கிராமங்களுக்கும் தண்ணீர் செல்லாத நிலை
ஏற்பட்டுள்ளது.
உடைப்பு ஏற்பட்டு உள்ள பகுதியை அதிகாரிகள்
ஆய்வு செய்து, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
