/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2024 06:53 AM
கரூர் : கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது.
ஆனால், கரூர் ஆண்டாங்கோவில் கீழ்பாகம், திருமாநிலையூர், கோயம்பள்ளி, திருமுக்கூடலுார், ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்றுக்குள் சிலர் சட்ட விரோதமாக ஆழ்குழாய் கிணறு அமைத்து, மோட்டர் மூலம் தண்ணீர் எடுத்து லாரிகளில் விற்று வருகின்றனர். இதனால் ஆற்றுக்குள் போடப்பட்டிருக்கும் குடிநீர் உறிஞ்சும் கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்கள் கூறியதாவது:ஆண்டாங்கோவில் கீழ்பாகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆற்றுக்குள் போடப்பட்டிருக்கும் தண்ணீர் உறிஞ்சும் கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. சிலர் ஆற்றுக்குள் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதிலிருந்து தண்ணீர் உறிஞ்சி லாரிகளில் விற்கின்றனர். இந்த குடிநீர் திருட்டு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடும் வறட்சி நிலவும் நிலையில் குடிநீர் திருட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது புகார் வரும் போது, அதிகாரிகள் பெயரவில் நடவடிக்கை எடுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

