/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேட்டுப்பட்டி சாலையில் குடிநீர் குழாய் விரிசலால் தண்ணீர் வீண்
/
மேட்டுப்பட்டி சாலையில் குடிநீர் குழாய் விரிசலால் தண்ணீர் வீண்
மேட்டுப்பட்டி சாலையில் குடிநீர் குழாய் விரிசலால் தண்ணீர் வீண்
மேட்டுப்பட்டி சாலையில் குடிநீர் குழாய் விரிசலால் தண்ணீர் வீண்
ADDED : ஜூன் 22, 2024 12:48 AM
கிருஷ்ணராயபுரம்: மேட்டுப்பட்டி சாலையில், குடிநீர் குழாய் விரிசல் காரணமாக தண்ணீர் தினமும் வீணாகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டுப்பட்டி சாலை வழியாக காவிரி குடிநீர் குழாய் செல்கிறது.
இந்த குழாய் லாலாப்பேட்டை சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, கொண்டு வரப்படுகிறது. தற்போது மேட்டுப்பட்டி சாலை அருகில், குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தினமும் அதிகமான தண்ணீர் சாலையோர பள்ளத்தில் தேங்கி வீணாகிறது. இதனால் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் குடி தண்ணீர் பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. விரிசல் அடைந்த குழாயை, சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.