ADDED : ஏப் 23, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,:கொம்பாடிப்பட்டி புனவாசிப்பட்டி நான்கு சாலை சந்திப்பில் காவிரி கூட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருந்து,
குழாய் வழியாக கொண்டு வந்து தண்ணீர் தொட்டியில் நீர் ஏற்றப்பட்ட பிறகு, மற்ற பஞ்சாயத்துகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கொம்பாடிப்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகில், நீர் ஏற்றும் பகுதியில் உள்ள குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டியில் நீர் ஏற்றும்போது தண்ணீர் வீணாகிறது.

