/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'கடந்த தேர்தலில் வாக்குறுதிகளை கொண்டு சொல்ல தவறி விட்டோம்' மாஜி அமைச்சர் தங்கமணி
/
'கடந்த தேர்தலில் வாக்குறுதிகளை கொண்டு சொல்ல தவறி விட்டோம்' மாஜி அமைச்சர் தங்கமணி
'கடந்த தேர்தலில் வாக்குறுதிகளை கொண்டு சொல்ல தவறி விட்டோம்' மாஜி அமைச்சர் தங்கமணி
'கடந்த தேர்தலில் வாக்குறுதிகளை கொண்டு சொல்ல தவறி விட்டோம்' மாஜி அமைச்சர் தங்கமணி
ADDED : நவ 12, 2024 01:33 AM
'கடந்த தேர்தலில் வாக்குறுதிகளை கொண்டு சொல்ல தவறி விட்டோம்'
மாஜி அமைச்சர் தங்கமணி
கரூர், நவ. 12-
''கடந்த சட்டசபை தேர்தலில், வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்ல தவறி விட்டோம்'' என, முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க., மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்க மணி பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து கவலைப்பட வேண்டாம். லோக்சபா தேர்தல் வேறு. சட்டசபை தேர்தல் வேறு. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், லேப்டாப் திட்டம், ஸ்கூட்டி திட்டம் ஆகியவற்றை தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. அதை, பொதுமக்களிடம் பிரசாரம்
செய்து எடுத்து சொல்ல வேண்டும்.
கடந்த சட்டசபை தேர்தலில், ஆண்டுக்கு, 6 சமையல் காஸ் சிலிண்டர் இலவசம், பெண்களுக்கு மாதம், 1,500 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என, இ.பி.எஸ்., வாக்குறுதி அளித்தார். அதை, மக்களிடம் கொண்டு செல்ல தவறி விட்டோம். இதனால், அ.தி.மு.க., வுக்கு தோல்வி ஏற்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில், அந்த வாக்குறுதிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது. அதை, பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பார். இந்த தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகமாகி விட்டது. இளைஞர்களின் எதிர்காலம் பாழாகி விட்டது. இதனால், தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் உள்ள குறைகளை, நிர்வாகிகள் சரி செய்ய வேண்டும். ஒரு ஓட்டை கூட, சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. வரும் சட்டசபை தேர்தலில், இ.பி.எஸ்., பலமான கூட்டணியை அமைப்பார். அதில், நிச்சயம் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அதற்காக, அ.தி.மு.க., நிர்வாகிகள் பூத் வாரியாக, பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சி, 100 ஆண்டுகள் நடக்கும் என, ஜெயலலிதா சொன்னது, மேடை யில் உள்ள எங்களை நம்பி இல்லை. தொண்டர்களை நம்பித்தான், சட்டசபையில் பேசினார். அதை வேதவாக்காக எடுத்து கொண் டு, அ.தி.மு.க., தொண்டர்கள் சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். வரும், 2026ல் அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தி, இ.பி.எஸ்.,ஐ முதல்வராக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.