'சிலிண்டர் தட்டுப்பாடு இருந்தாலும் ஹோட்டல்களை மூட மாட்டோம்'
'சிலிண்டர் தட்டுப்பாடு இருந்தாலும் ஹோட்டல்களை மூட மாட்டோம்'
ADDED : மார் 13, 2026 04:22 AM
கரூர்: ''சிலிண்டர் தட்டுப்பாடு இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் கடைகளை மூட மாட்டோம்,'' என, கரூர் ஹோட்டல் உரிமை-யாளர்கள் சங்க தலைவர் கருப்ப சாமி தெரிவித்தார்.
கரூரில், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை வகித்து பேசினார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதா-வது:கடந்த, 10 நாட்களுக்கு முன், 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்பட்ட தனியார் காஸ் சிலிண்டர்கள், தற்போது தட்டுப்பாடு காரணமாக, 4,000 முதல், 4,500 ரூபாய் வரை விற்கப்படு-வதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் பயன்-பாட்டை குறைக்க காலை, 11:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை பல்வேறு ரோஸ்ட் வகைகள் மற்றும் சைனீஸ் உண-வுகள் தயாரிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஹோட்டல் தொழிலில் குறிப்பிட்ட நேரத்தை குறைத்து கொள்ளவும், எளி-மையான காலை உணவுகளான இட்லி, பொங்கல், தோசை ஆகி-யவற்றை மட்டும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நெருக்கடி இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, கரூர் மாவட்டத்தில் ஹோட்டல் உணவுகளின் விலையை இதுவரை உயர்த்தவில்லை.
இந்த தட்டுப்பாடு நீடித்தால் விறகு, மின் அடுப்பு போன்ற மாற்று எரி பொருள்களுக்கு மாறுவது குறித்தும், டீ போன்ற பானங்களை பாய்லர் மூலம் தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்-பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் கடைகளை மூட மாட்டோம். குறைந்த அளவிலான உணவு வகைகளுடன் வாடிக்-கையாளர் சேவையை தொடருவோம். பிரச்னை இப்படியே தொடர்ந்தால், விலையேற்றத்துக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
