/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'அப்டேட்' இல்லாத இணையதளம்: அரசு திட்டங்களை அறிவதில் சிரமம்
/
'அப்டேட்' இல்லாத இணையதளம்: அரசு திட்டங்களை அறிவதில் சிரமம்
'அப்டேட்' இல்லாத இணையதளம்: அரசு திட்டங்களை அறிவதில் சிரமம்
'அப்டேட்' இல்லாத இணையதளம்: அரசு திட்டங்களை அறிவதில் சிரமம்
ADDED : மே 19, 2025 01:47 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக இணையதளத்தில், 'அப்டேட்' இல்லா-ததால், தற்போதைய அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மாவட்டங்களை பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள, மாவட்டம் வாரியாக இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்-ளது. இந்த இணைய தளத்தில், மாவட்ட தகவல்கள், வளர்ச்சி திட்டங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த பணிகளை, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, தேசிய தகவல் மையம் செய்து வருகிறது. கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், https://karur.nic.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.
மாவட்டத்தின் வரலாறு, பரப்பளவு, சிறப்பு, முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்கள், துறை போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்-ளன. இந்த இணையதளத்தில், பெரும்பாலான தகவல்கள், 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளது. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை பற்றி தகவல்-களை, கரூர் மாவட்ட இணையதளத்தில் எதையும் குறிப்பிட-வில்லை.
வேளாண், கூட்டுறவு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கல்வி மாற்றத்திறனாளிகள் உள்பட பல துறைகளை பற்றி உரிய தக-வலும் கிடையாது. இணைய தளத்தில் திட்டங்கள் மற்றும் மாவட்டம் சார்ந்த புள்ளி விபரங்கள் புதுப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை கலெக்டர் மாற்றத்திற்கு பின், அவரது பெயர், போட்டோ மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது. கலெக்டரின்
உத்தேச பயண நிரல் குறித்து தகவல் பதிவு செய்யப்படவில்லை. மற்றபடி, 2016-17ம் ஆண்டு பின் தகவல்கள் அப்டேட் செய்-யாமல், கடமைக்காக இயங்கி வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாக இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.