/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பண்டரிநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பண்டரிநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜன 16, 2025 07:10 AM
கரூர்: கரூரில், பண்டரிநாதன்--ரகுமாயி தாயார் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர், ஜவகர்பஜாரில் பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் பஜனை மடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று, திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு, நேற்று திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பண்டரிநாதர்-ரகுமாயி தாயார் மணக்கோலத்தில் எழுந்தருளினர். இதில், தாயாருக்கு வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சேலை, வேட்டி, பழங்கள், பூக்கள் மற்றும் மங்கல பொருட்களை சீராக தாம்பூல தட்டுக்களில் எடுத்து வந்து வைத்திருந்தனர்.
பின், யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீரங்கம் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பண்டரிநாதன் தாலி கட்டி ரகுமாயி தாயாரை ஏற்றுக் கொண்டார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் பூக்களை துாவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவை ரோடு, செங்குந்தபுரம், சின்னாண்டாங்கோவில் ரோடு, திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

