ADDED : நவ 12, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: வீரகுமரான்பட்டி கிராமத்தில், நெல் வயல்களில் விவசாய தொழிலாளர்கள் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரகுமரான்பட்டி கிராமத்தில் விவ-சாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். வயல்களில் தற்-போது களைகள் அதிகம் வளர்ந்து வருவதால், நெற் பயிர்கள் வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, நெற் பயிர்கள் நடுவில் வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணிகளில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். களைகள் அகற்றுவதால், நெற் பயிர்கள் வளர்ச்சி ஏற்பட்டு, கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.