ADDED : ஏப் 08, 2024 07:31 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் அருகே சுற்றுலா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள், மீன் அருங்காட்சியகம், ஊஞ்சல் ஆகியவை உள்ளன. விடுமுறை தினம் என்பதால், மாயனுார் சுற்றுலா பூங்காவை சுற்றி பார்க்க கரூர் மாவட்ட பகுதியில் இருந்து சுற்றுலா பயணியர்கள் வருகை தந்து, சுற்றுலா பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.மேலும், குழந்தைகள் மீன் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். நீண்ட நாட்களுக்கு பின், மாயனுார் சுற்றுலா பூங்காவிற்கு மக்கள் வந்திருந்ததால் பூங்கா களைக்கட்டியது.
