ADDED : செப் 14, 2026 06:47 AM
குளித்தலை:குளித்தலை
கடம்பர்கோவில், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை,
10:30 மணிக்கு, சேலத்திலிருந்து, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,
நாமக்கல், தொட்டியம், முசிறி காவிரி பாலம் வழியாக, குளித்தலையில்
இருந்து திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பெட்டவாய்த்தலை
மற்றும் திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில்
பங்கேற்பதற்காக வருகைபுரிந்தார்.
அப்போது, குளித்தலை
கடம்பர்கோவில் பைபாஸ் சாலையில், கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில்
மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் கட்சியினர்
வரவேற்பளித்தனர். கிருஷ்ணராயபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ்,
குளித்தலை ஒன்றிய செயலாளர் கருணாகரன், மருதுார் நகர செயலாளர் முத்து
ஆகியோர், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
