தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கட்டடத்தில் இருந்து விழுந்த வெல்டிங் தொழிலாளி பலி

கட்டடத்தில் இருந்து விழுந்த வெல்டிங் தொழிலாளி பலி

கட்டடத்தில் இருந்து விழுந்த வெல்டிங் தொழிலாளி பலி


ADDED : ஆக 24, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:சின்னதாராபுரம் அருகே, கட்டடத்தில் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி வேம்பாறை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 35; வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த, 21 மாலை, சின்னதாராபுரம் அருகே, சி.கூடலுாரில் ஒரு கட்டடத்தில், 25 அடி உயரத்தில் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்த நாகராஜ், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து, நாகராஜின் மனைவி ஈஸ்வரி, 26, போலீசில் புகார் செய்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us