ADDED : ஆக 23, 2025 01:35 AM
கரூர் :கரூர் அருகே துவரப்பாளையம் சமுதாய கூடத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, 16 பயனாளிகளுக்கு, 23.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வருவாய் துறை சார்பில், 10 பேருக்கு ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, விதவை சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மூன்று பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், எரிசக்தி துறை சார்பில், 1 நபருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணை, கூட்டுறவு துறையின் சார்பில், 2 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 23.10 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி என மொத்தம், 16 நபர்களுக்கு, 23.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ., செந்தில்
பாலாஜி வழங்கினார்.
முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சரவணன், சப்-கலெக்டர் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.