/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.25.99 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.25.99 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜூலை 24, 2025 01:28 AM
கரூர், கரூர் தான்தோன்றிமலையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். முகாமை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 17 பயனாளிகளுக்கு இருப்பிடச் சான்று, வருமானச்சான்று, பட்டா மாறுதல் மற்றும் வகுப்பு சான்று உள்ளிட்டவைகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில், 2 மகளிர் சுயஉதவி குழுவினருக்கு தலா, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி என மொத்தம், 45 பயனாளி களுக்கு, 25.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, கரூர்
ஆர்.டி.ஓ., முகமது பைசல், துணை மேயர் தாரணி சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் ராஜா, கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.