ADDED : மார் 02, 2026 09:06 AM
கரூர்: கரூர் மாநகராட்சியையொட்டி பல பகுதிகளில் விவசாய பணி நடந்து வந்தது. அங்கு, கிணறுகள் மூலம் பாசன செய்து வந்தனர். தற்போது, நகரமயமாக்கல் காரணமாக வயல்கள் பெரும்பாலும் பிளாட் போட்டு விற்கப்பட்டு வருகின்றன. இங்கு, ஏராளமான குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இங்கு கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் பல உள்ளன. பாதுகாப்பற்ற முறையில் இந்த கிணறு திறந்து கிடக்கின்றன. கிணற்றை மூடாததால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இப்பகுதியில் சிறுவர்கள் விளையாடும்போது தவறிவிழும் அபாயம் இருக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. நீண்டகாலமாக கிணறுகள் திறந்த நிலையிலேயே மூடப்படாமல் காணப்படுகிறது. இதில், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

