தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : நவ 26, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று மதியம் வரை சாரல் மழை பெய்தது. வெயில் மற்றும் கடும் குளிர் என, மாறுபட்ட சீதோஷ்ணநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கரூர், திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில், நேற்று மதியம் பல்வேறு இடங்களில், கனமழை இல்லாத நிலையில், சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.மேலும், சாரல் மழை இடையே அடிக்கடி வெயிலும் அடித்தது. சாரல் மழை காரணமாக கடும் குளிரால் நேற்று காமராஜர் தினசரி மார்க்கெட், கரூர், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உழவர் சந்தைகளுக்கு, பொதுமக்கள் குறைவாகவே வந்திருந்தனர். கரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின.

பொதுவாக, சாரல் மழை காரணமாக ஏற்பட்ட கடும் குளிரால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அரவக்குறிச்சியிலும் மழை

அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்த நிலையில். நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1:30 மணி முதல் 2:00 மணி வரை மிதமான மழை

பெய்தது.

இதே போல மாலை 4:00 முதல் 4:30 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து, சாலைகளில் ஓடியது. அரவக்குறிச்சி ஒன்றியத்தின், 20 ஊராட்சிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, வீரியபாளையம் பகுதிகளில் நேற்று மதியம் முதல் மழை பெய்தது. மழையால் நெல், வாழை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, சோளம் பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. நெல் வயல்களுக்கு மழைநீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us